சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு பெறுவதில் மந்தகதி – எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு

2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் “நியூ டயமன்ட்” கப்பல் அழிக்கப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக 3440 மில்லியன் ரூபாய் கோரப்பட்டது.

இருப்பினும் 12 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவினங்கள் மீதான குழு விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தோடு எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் ஏற்பட்ட இழப்பு 14 மில்லியன் என மதிப்பிடப்பட்ட போதிலும் 7.8 மில்லியன் மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மக்களிடம் இருந்து பெறப்பட்ட நட்டஈட்டை மீளப்பெறும் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார்.

இதற்காக பெருமளவிலான செலவழித்து குழுக்கள் அறிக்கைகளை தயாரித்த போதும் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.