தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இதற்கமைய யாழிற்கு விஜயம் செய்துள்ள இவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டனர்.

இதேவேளை கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விஐயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.