அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதில் அர்த்தமில்லை – ஆனந்தசங்கரி

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தீர்வு வரும்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் அதனை யார் அழித்தார்களோ அவரிடமே தற்போது தீர்வுக்காக சென்று நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ரணில் விக்ரமசிங்க வழங்கப்போகும் தீர்வினை அங்கிருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு இந்தியாவில் உள்ள முறை மூலமே தீர்வை எட்டமுடியும் என்றும் அவ்வாறான தீர்வுக்கே இந்தியாவும் ஆதரவளிக்கும் என்றும் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.