களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

 

(எருவில் துசி) எருவில் கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் களுவாஞ்சிகுடி நோக்கி பட்டிருப்பு சந்தியில் இருந்து கிழக்குப் பக்கமாக உள்ள வீதியினூடாக சென்று பிரதான வீதிக்கு சென்ற போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வஸ் வண்டியுடன் மோதியதில் எருவிலை சேர்ந்த பிரியதர்சன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.