நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டம்!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நட்டம் சுமார் 8600 கோடி ரூபாய் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் முழு விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.