மஹிந்த ஆரோக்கியமாக வாழ வேண்டும்; கொழும்பில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டும் அவருக்கு நல்லாசி வேண்டியும், பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் நேற்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தினார்.

சர்வதேச இந்துமத பீடம் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா ராஜேந்திர செட்டியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

கெளரவ அதிதியாக இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத், முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் கலாநிதி இராாச்சந்திர பாபுசர்மா குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சமய வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் மஹிந்தவுக்கு ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.