மின் கட்டண அதிகரிப்பு உறுதியானது

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணங்களின் கணக்கீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.