கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட புதிய பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி வ.குணபாலசிங்கம் இன்று(02) வெள்ளிக்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
கிழக்குப்பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையின் முதுநிலை விரிவுரையாளரும், இந்து நாகரீகத்துறையின் தலைவராகவும் இவர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தில் கல்வி பயின்ற முதல் கலை, கலாசார பீடாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.