மின்சாரக் கட்டண திருத்தம் தேவையில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வந்தன.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய, அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் காலநிலை மாற்றத்துடன் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறுபடுகிறது. கட்டணத்தை அதிகரிப்பதால் அதனை செய்யமுடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.