கல்வியல் கல்லூரியில் பிரியாவிடை நிகழ்ச்சியும்  நூல் வெளியீடும்

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியின் 23ஆம் அணி ஆசிரிய பயிலுனர்களின் இறுதி நாள் பிரியாவிடை நிகழ்ச்சியும்  நாடகமும் அரங்கியலும் பாடநெறி மாணவர்களின் நூல் வெளியீட்டு விழாவும் கல்லூரியில்  இன்று(01) இடம் பெற்றது.

மாணவர்களின் செயற்றிட்டமாக கல்வி உளவியல் சார்ந்த ஆக்கங்களை உள்ளடக்கிய   “கல்வி உளவியல் பிரயோகம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.  இதற்கு  விரிவுரையாளர் இ.வேல்சிவம் பொறுப்பு விரிவுரையாளராக செயற்பட்டதுடன் இந்நிகழ்ச்சிக்கு  கல்லூரியின் பீடாதிபதி M.I.M நவாஸ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் உபபீடாதிபதி தொடருறு கல்வி திருமதி W.மணிவண்ணன்  கலந்து சிறப்பித்து இருந்தார்.