வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – சீனத் தூதுவர் சந்திப்பு

சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (வியாழக்கிழமை) காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு நாடுகளும் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாகப் பணியாற்றவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் பிரச்சினைகளில் தொழில்முறை பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, சீனத் தூதுவர் Qi Zhenhong ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகேவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.