யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை (30) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.