கைவிடப்பட்ட நிலையில் பாலம், மக்கள் போக்குவர செய்வதில் பெரும் சிரமம்.

(ஹஸ்பர்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசம் தீவையும்-கல்லடி வெட்டுவானையும் இணைக்கும் வடசல் பாலம் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன.

இப்பாலம் திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களினால் 2021.10.16 ஆம் திகதி புனரமைப்பு பணிக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் தற்போது இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

இக் கட்டுமான பணி கைவிடப்பட்டதால் பொதுமக்கள் மீனவர்கள், விவசாயிகள் முதலான தொழிலாளர்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

சுமார் 7-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இப்பாலத்தை பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போதிலும் அவை முழுமையாக பூரணமடையாது பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

வைத்தியசாலைக்குச் செல்வதாக இருந்தாலும் இப் பாலத்தை பயன்படுத்த முடியாது, பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

மக்கள் போக்குவரத்துச்
செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இப்பாலத்தை செய்து தருமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.