வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு – ஷெஹான் சேமசிங்க

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், குறித்த காலக்கெடு நவம்பர் 30ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.