அரசடித்தீவு பாடசாலையில் 9ஏ சித்தி

(பெருநிலத்தான்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் அண்மையில் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் கே.டிவானுஜன் என்ற மாணவன் 9ஏ சித்திகளைப் பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 9ஏ சித்தி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.