உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம; மன்னாரில்

( வாஸ் கூஞ்ஞ)

தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் மாவட்ட மட்ட குழு கூட்டம்    மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல்  அவர்களின் தலைமையில்   இடம்பெற்றது.

இதன்போது  உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சத்துணவினை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள்இ வறுமையிலும் பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுக்கும் வழிவகைகள்இ சிறுவர்களின் போசாக்கு முதலான முக்கியமான பல விடயங்கள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில்  கலந்துரையாடப்பட்டன.

மேலும் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இவ் கூட்டத்தில்  அதிக கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த இவ் கூட்டத்தில் சுகாதார திணைக்கள பணிப்பளார்இ இராணுவத்தின் பொறுப்பதிகாரிகள்இ மேலதிக அரசாங்க அதிபர்இ திட்டமிடல் பணிப்பாளர்இ பிரதேச செயலாளர்கள்இ மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர்இ  பிரதி திட்டமிடல் பணிப்பாளர்இ மாவட்ட உலக உணவுத்திட்ட பொறுப்பதிகாரிஇ பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்இ ஏனைய அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.