அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் 51வது வீடு – மரப்பாலம் கிராமத்தில் வழங்கிவைப்பு!

(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா அவர்களது முற்றிசியினால், கனடா நாட்டில் வசிக்கும் ஐயப்பன் பக்தர்களின் நிதிப்பங்களிப்பில், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த வீடானது அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தொகையில் இவ் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் நேர்த்தியானதும், வசதியான முறையிலும் குறித்த வீடு மிகவும் குறுகிய நாட்களுக்குள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள 51வது இவ் வீட்டினை உத்தியோக பூர்வமாக வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இன்று காலை இடம்பெற்றது.
அமிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன் அவர்களும், மரப்பாலம் கிராமசேவையாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் கிராம மக்களும் கலந்துகொண்டருந்தனர்.