ஜனாதிபதி எதையும் மறைக்கவில்லை – பந்துல

ஜனாதிபதி எதனையும் மறைக்காமல் சகல தகவல்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவையின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத் தலைவரையோ சந்தித்ததாக தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி ஒரு கூட்டம் நடந்தால், அதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்றும் எதையும் மறைக்காமல் அனைத்து தகவல்களும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது தங்கள் நம்பிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.