மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார்-சிசிர ஜெயக்கொடி

ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சாவை ஏற்றுமதி தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவினை ஏற்றுமதித் தொழிலாக மேம்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வருவதோடு அதற்குத் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் நாங்கள் ஏற்கனவே தயார் செய்துள்ளோம்.

மேலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.