திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்புவிழா.

(த.சுபேசன்)

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்பு விழா வைபவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில் மீள்குடியேற்ற கிராமத்திற்கான உட்கட்டுமான மேம்பாட்டு திட்ட நிதி ஒதுக்கீட்டில் குறித்த மேல்மாடிக் கட்டடம் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தெல்லிப்பளை பிரதேச இணைப்பாளர் சா.ரவிக்குமார் கலந்து சிறப்பித்திருந்தார்.