தமிழர்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க கூடாது என்கின்றார் சரத் வீரசேகர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது என்றும் சரத் வீரசேகர உறுதியாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்ட போதும் அந்த உரிமைகளை தமிழ் தலைமைகள் பாதுகாத்துக் கொள்ளவில்லை என சாடியுள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை விஸ்தரித்தாலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.