கொடிகளையும் பதாகைகளையும் கிழித்தெறிந்த பொலிஸார் சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்!

மாவீரர் நாளுக்காக தமிழர்கள் ஏற்றியிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளையும் பதாகைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்துள்ளனர்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர கடற்கரையில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூறும் பாடல்களை ஒலிபரப்பினால் அவர்களை கைது செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.