மாவீரர்நாள்: முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடல்

தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒவ்வொரு வருடமும் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.