கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்து

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.