கை உயர்த்திய ’கை’ எம்.பிக்கு சிக்கல்

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பதற்கு எடுத்த தீர்மானம் தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்த அவர், மத்திய குழுக் கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டினார்.