ஆசிரியர்களுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று வெளியீடு

பெண் பாடசாலை ஆசிரியர்களுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை ஆசிரியர்கள் குழுவொன்று புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

இதன் காரணமாகவே இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.