சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சல்; விசேட வைத்தியர் நிபுணர் எச்சரிக்கை!

சிறுவர்களுக்கு இன்ப்ளுவென்சாவுக்கு இணையான வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதாக விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த தொற்றுக்கு உள்ளாகும் சிறார்களுக்கு காய்ச்சல், தலைவலி, தடிமன், தும்மல், உடல் வலி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறார்களுக்கு நுரையீரலுடன் தொடர்புடைய நோய் நிலைமைகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.