மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய 02 பில்லியன் ரூபாய் நிதியுதவி – சுகாதார அமைச்சர்

அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 02 பில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன் ரூபாய் கடன் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நிலுவைத் தொகையை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கெஹலிய ரம்புக்வெல்ல