நாடளாவிய ரீதியில் நாளை முதல் விசேட சுற்றிவளைப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் வகையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் விடுமுறை காலத்தை இலக்காகக் கொண்டு இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.