நாட்டை பாதுகாக்க முப்படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு

பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனை அண்மித்த கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியின் மூலம் இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.