பசிலின் தலையீட்டினால் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வரும் என பலருக்கு பயம் – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலையீட்டினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற அச்சத்தினால் சிலர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் பொலிஸ் மா அதிபருமான சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷவை வரவேற்க அவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மற்றுமொரு உறுப்பினரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றிருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என்றும் தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.