உடனடியாக அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் – அனுர

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வுகளை வழங்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் பாரிய சுமைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடு சற்று வழமைக்குத் திரும்பியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்ற கருத்தை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.

அரசாங்கம் கடன்களை திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் அதனால் கடன் சுமை மேலும் அதிகரித்து வருவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமாயின் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மக்களை மையப்படுத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக தமக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.