முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் தெற்கு அரசியலின் பலப் பரீட்சைக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கோரப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்திலேயே மேற்கண்டவாறு கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறந்த சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த சந்தர்ப்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால், எமது அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த நாட்டுக்கான சுபிட்சம் மிகுந்த வரவு செலவுத் திட்டமாக அமையும் என்றும் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.