ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.