பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புரைகளை பரப்பும் பலர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விபரங்களை கட்சி சட்ட குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பெயர்களில் தோன்றி பொதுஜன பெரமுன மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் சேறு பூச இந்த குழுக்கள் முனைவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.