பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆளும்கட்சி தடை – மைத்திரி குற்றச்சாட்டு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாட்டுக்கு பிரதான ஆளும் கட்சி தடையாக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொருளாதார கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளக்கு தீர்வு காண வேண்டும் எனில் முக்கிய நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என ஆராயாமல் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க கோட்டபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புடன் செயற்பட்டாலும் ஆளும்கட்சி முட்டுக்கட்டை போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.