வெளியார் தலையீடு தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? – ஸ்ரீதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மற்றும் நிதியுதவியை மட்டும் பெற்றுக்கொள்ள மட்டும் வெளியாரின் தலையீடு வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமல் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்குமானால் அது உலகம் தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு முன்பாக சிங்கள தலைவர்கள், சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு உடன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.