விஜயதாச தலைமையில் இடம்பெற்றது பயங்கரவாத தடைச் சட்ட கைதிகள் தொடர்பாக மீளாய்வு கூட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் குறித்த விசேட மீளாய்வுக் கூட்டத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அழைப்பு விடுத்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கைதிகள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் அவர்கள் சிறைவைக்கப்பட்ட காலம் மற்றும் விடுதலைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இதன்போது மேலதிக தகவல்களை வழங்கியுள்ளனர்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீதான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.