யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

இன்று (சனிக்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய பரிசோதனை நிகழ்வு இன்று காலை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

இதன்போது யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் யாழ்ப்பாண பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர், விருந்தினர்களாக பங்கேற்று இருந்தனர்.

இதேவேளை பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்றுகின்றமை குறிப்பிடதக்கது.