சட்டவிரோத மண் அகழ்வு: நேரில் சென்று ஆய்வுசெய்தார் இரா. சாணக்கியன்!

சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வினை மேற்கொண்டார்.

வாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்பாச்சுகின்ற ஆறுகளிலும், வயல்களிலும், அனைகட்டுகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து ஆராய (வியாழக்கிழமை) இரா. சாணக்கியன் அங்கு சென்றார்.

வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுவதை கண்டித்த அவர், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் என மாவட்டத்தில் இரண்டு அரசசார் அமைச்சர்கள் உள்ள போதிலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார்.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான் என சுட்டிக்காட்டிய அவர், இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? எனவும் சந்;தேகம் எழுப்பினார்.