ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருடிக்கடி, இந்தியாவின் உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.