ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிலிருந்து இன்று பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை ஜப்பான் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டார்.

தமது ஜப்பானிய விஜயத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், தமது ஜப்பான் விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி ரணில், 55 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.