போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு!

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்துமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சமீப நாட்களாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தகவல் உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.