இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 வது ஜனன தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு

(தலவாக்கலை பி.கேதீஸ்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 வது ஜனன தினத்தையும்,இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது வருட பூரத்தியையும் முன்னிட்டு அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு ஒன்று நேற்று (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளர் விஜேசிங்,அட்டன் பொலிஸ் நிலைய உதவி அதிகாரி பிரயந்த விக்கிரமநாயக்க, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்ஜித் ஜெயசேன, வைத்தியர் டி.எஸ்.டி.செனவிரத்ன, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் நிர்வாக பிரதி பணிப்பாளர் சத்திவேலு, அதன் அபிவிருத்தி பிரதி பணிப்பாளர்கள் தியாகராஜா, ஜீவனந்தராஜா மற்றும் நோர்வூட் விளையாட்டு அரங்கின் வதிவிட முகாமையாளர் கெப்ரியல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.