இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அமெரிக்காவின் துணைச் செயலாளர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) உறுதியளித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.