69 இலட்ச மக்களின் ஆணை தற்போது இல்லை, அரசுடன் இணைந்து செயற்படுமாறு பிரசன்ன ரணதுங்க கோரிக்கை

பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஆகவே பிளவுபடாமல் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தின்போதே பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இன்றைய ஜனாதிபதியோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ காரணமல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் யுத்தம், சுனாமி உட்பட ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் பெற்றுள்ள பேரழிவுகளுமே காரணம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.