ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தீர்ப்பின் மூலமே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது .