கால்பந்தாட்ட லீக்குகளுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கும் ஒரு புதிய முறை   – கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்

கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணம், வெள்ளிக் கிண்ணம் என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் இருக்கும் அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட லீக்குகளுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கும் ஒரு புதிய முறையினை அமுல்ப்படுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்ட  இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் கால்பந்தாட்டத்திற்கு புதிய புத்துணர்ச்சியினை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கால்பந்தாட்ட சம்மேளனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் பின்இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் ஜுன் 30ம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடைபெற்று எங்கள் தலைமையில்புதிய நிருவாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் போது வடக்கு கிழக்கில் இருந்தே எமக்கு அதிகப்படியான வாக்குகள்கிடைக்கப்பெற்றன இதனால் நாங்கள் வடக்கையும் கிழக்கையும் மறந்து இந்தக் கால்பந்தாட்டத்தை எடுத்துச் செல்லமுடியாது.

நாங்கள் எமது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது கொவிட் நிலைமை காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்தகாலம். இருப்பினும் நாங்கள் கால்பந்தாட்டத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கடன் பலதரப்;பட்ட புதியவிடயங்களை ஆரம்பித்திருந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்எமது அணி விளையாடி மிகத் திறமையான வெளிப்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது. அதே போன்று எங்களால்உருவாக்கப்பட்ட நான்கு நாடுகளுக்கிடையிலான பிரதமர் வெற்றிக் கிண்ணம் என்ற சர்சவதேச மட்டத்திலானபோட்டித்தெடரை இலங்கையில் 18 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருந்தோம். அது மட்டுமல்லாதுஇலங்கையில் முதற் தடவையாக மாகாணங்களுக்கிடையிலான போட்டித் தொடரொன்றை நாங்கள்ஆரம்பித்திருந்தோம். அத்தொடரில் நாங்கள் பாரிய வெற்றியினையும் பெற்றிருந்தோம்.

அனைத்து வீரர்களும் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று இப் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைஏற்படுத்தியிருந்தோம். இது எமது வீரர்களுக்கும், அந்த அந்த பிரதேசங்களில இருக்கும் ரசிகர்களுக்கும் புதியதொருஅனுபவத்தினைக் கொடுத்திருந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட பலதரப்பட்ட வீரர்களய தற்போது இலங்கைத் தேசியஅணியில் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பான விடயம்.

அண்மையில் 20 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான தெற்காசிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்பதற்காகஎமது தேசிய அணி இந்தியா சென்றிருக்கின்றது. அந்த அணியில் கிழக்கினைச் சேர்ந்த நான்கு வீரர்களும் வடக்கில்இருந்து ஆறு வீரர்களும் இடம்பிடித்திருக்கின்றார்கள. இதில் ஒன்பது வீரர்கள் இந்த மாகாண ரீதியில் இடம்பெற்றபோட்டிகளில் இருந்து கண்டறியப்பட்டவர்களாவர்.

அதேபோல் எமது தேசிய அணியை எடுத்துக் கொண்டால் முதற்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் பேசும்வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கக் கூடிய செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றோம். அதேபோன்றபாடசாலைகள், கழகங்களுக்கிடையிலான போட்டிகளை ஆரம்பிக்க இருக்கின்றோம். அத்துடன் மேலுமொரு புதியதிட்டமாக கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணம், வெள்ளிக் கிண்ணம் என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில்இருக்கும் அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட லீக்குகளுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கும் ஒருபுதிய முறையினை அமுல்ப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் கால்பந்தாட்டத்திற்கு புதிய புத்துணர்ச்சியினை மேற்கொண்டு வருகின்றோம். கொவிட் நிலைமை அதற்கு முன்னர் ஈஸ்டர் தக்குதல் போன்றவற்றின் காரணமாக இலங்கையில் கால்பந்ததாட்டம்சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக எமது முதற் குறிக்கோளாகஇருந்தது மீண்டும் இந்தக் கால்பந்தாட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்பதே.

அத்துடன் நான்கு வருட திட்டமொன்றின் மூலமும் போட்டிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டங்களிலும்மைதானங்களை அமைக்கக் கூடிய திட்டங்களையும் 2023ம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கஇருக்கின்றோம். இது தொடர்பில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திஅதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம். மாவட்ட ரீதியில் உதைபந்தாட்டத்தினைமேம்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு மாவட்டத்தில் இருக்கும் விளையாட்டு மைதானங்களைப்புனரமைத்து சில மைதானங்களில் மின்னொளி போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளையும்மேற்கொள்ளவுள்ளோம்.

மிகவும் குறுகிய காலகட்டத்தில் நாங்கள் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்துள்ளோம் அதிலும் தற்போதுள்ளபொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் மத்தியில் மிகச் சிரமமான காலகட்டத்தில் உதைபந்தாட்டத்தினை மேலெடுத்துச்செல்லக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தெற்காசிய போட்டித் தொடரினைஇலங்கையில் நடத்த எண்ணியுள்ளோம் அதில் ஆறு நாடுகள் பங்கேற்கவுள்ளன. தற்போதைய நிலையில் இவ்வாறானசர்வதேச போட்டிகளை நடாத்துவது எமது பொருளாhர நிலைமைகளை மேம்படுத்தவற்கும் வெளிநாட்டு வருவாயைஈட்டிக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும் என நம்புவதோடு, இலங்கையைப் பற்றி வெளிநாடுகள் கொண்டுள்ளபார்வையையும் ஓரளவிற்கு நாங்கள் மாற்றிக் கொள்ளவும் முடியும். அத்துடன் செப்டெம்பர் மத இறுதியில் இரண்டுநாடுகளுக்கிடையிலான போட்டித் தொடரை இலங்கையில் நடத்தத் தீர்மானித்துள்ளோம் அதுகைகொடுக்காவிட்டால் வேறு ஒரு நாட்டில் இதனை மேற்கொள்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.

அத்துடன் கட்டார் கால்ப்பந்தாட்ட சம்மேளனத்திடம் எங்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகசர்வதேச தரத்திலான பயிற்றுவிப்பாளர்கள் மூவரை வழங்கிருக்கின்றார்கள். அவர்கள் எற்கனவே அவர்களின்வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் மூலம் எமது தேசிய அணிகள் அனைத்iதையும் ஒரே தரத்தில்பேண முடியும். அதேபோல் எமது தேசிய அணியை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சி முகாம்களைமேற்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

அடுத்த விடயமாக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் புதிய தலைவருக்கான தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில்நடத்தப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் விடக்கப்பட்டிருந்தது.இருப்பினும் கடந்த தேர்தலுக்கு முன்னர் எமது தாய்ச்சங்கமான சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனம் மிகக்கடுமையான எச்சரிக்கையொன்றினை விடுத்திருந்தது. அதாவது தற்போது எங்களிடம் இருக்கும் யாப்பு முப்பதுவருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட பழமையான யாப்பாக இருக்கின்றது. அதனை தற்போதைய நிலைக்குசர்வதேச நியமங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் மாறறியமைக்க வேண்டும்.

இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் அதனைத் தவற விட்டுவிட்டார்கள். அதனை மாற்றுவதற்கான முயற்சிகளைநாங்கள் மேற்கொண்டிருந்தோம் துரதிஸ்டவசமாக இரண்டு லீக்குகள் எங்களது முயற்;சிகளுக்கு எதிராக கொழும்புநீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவு பெற்றிருந்தார்கள். சுமார் 45 நாட்களுக்கு மேலாகநாங்கள் அந்த வழக்கிற்கு முகங்கொடுத்து அதில் வெற்றி கொண்டோம் இருப்பினும், அவர்கள் மேன்முறையீடுசெய்துள்ளார்கள் இதனால் வருகின்ற செப்டெம்பர் மாதம் வரை அதனை மேற்கொள்ள முடியாமல் இருக்கும்.

எம்மோடு தேர்தலில் தோல்வியடைந்த சில நபர்கள் சில லீக்குகளைப் பயன்படுத்தி இந்த யாப்புத் திருத்தத்தைமாற்றிக்கொள்ள விடாமல் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சதித் திட்டங்களை நாங்கள்முறியடித்து இலங்;கை கால்பந்தாட்ட சம்மேளத்திற்கான சரியான முறையான யாப்பினை மேற்கொள்வோம்.

ஆனாலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த யாப்பினைத் திருத்தி அதன் அடிப்படையில் தேர்தலைநடத்துவதற்குரிய நாள் போதாமல் இருப்பதன் காரணத்தினால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின்பிரதிநிதிகளை நாங்கள் இங்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம். அடுத்த வாரமளவில் விசேட குழுவொன்று இலங்கைவர இருக்கின்றது. நிச்சயமாக யாப்பு திருத்தத்தின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள்குறியாக இருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஒரு நாடாக இந்த விளையாட்டை அடுத்தநிலைமைக்குக் கொண்டு செல்வவதற்கு முறையான யாப்பு அவசியம்.

எமது நிருவாகத்திற்கு எதிராக அடுத்த தேர்தலில் போட்டியிட இருக்கும் ஒருசிலர் பல சதித் திட்டங்களைமேற்கொள்வதாக அறிந்து கொண்டோம். இந்த நிருவாகம் சரியான முறையாக, யாப்பின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு ஊழலும் அற்ற நிருவாகமாக இருக்கின்றது. வரலாற்றின் முதற்தடவையாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 2023ல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருமானத்தை ஒரு பில்லியனாக அதிகரிக்க திடடங்களைவகுத்துள்ளோம்.

எனவே ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பதை நாங்கள் வரவேற்கின்றோம் மாறாக பொய்யான குற்றச்சாட்டுகளைமுன்வைத்து வெற்றி பெற நினைப்பது தவறான விடயம். எமது நிருவாகம் தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும்உள்ள லீக்குகள் நன்கு அறிந்துள்ளன. அவர்கள் கடந்த தேர்தலைப் போன்று இனிவருகின்ற தேர்தல்களிலும்எங்களோடு தோளாடு தோல் நின்று உழைப்பார்கள் என பகிரங்க ஆதரவினைத் தெரிவித்துள்ளர்கள் என்றுதெரிவித்தார்.