புதிய ஜனாதிபதி தெரிவு – யாருக்கு ஆதரவு என்பது குறித்து ரிஷாட் அணி இன்று அறிவிப்பு!

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பதை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துடன் தாங்கள் உடன்படுவதாக முன்னதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்துடன் தாங்கள் இணைந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.