பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.